உலக சுற்றுச்சூழல் நாள் எங்கள் பள்ளியில் 25.06.2022 அன்று கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர் அதில் உற்ச்சாகமாக பங்கேற்று விழிப்புணர்வு படங்களும், வாசகங்களும் தாங்கிய அட்டைகளை கையில் ஏந்திக் கொண்டு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிக் கொண்டு தெருக்களில் பேரணியாக வந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். மாணவர்கள் சுற்றுசூழல் சம்மந்தமான பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் உரையாடலாகவும், பட்டிமன்றமாகவும், நாடகமாகவும் ,பாடல் மூலமாகவும், மேடை பேச்சாகவும் நடத்தி, மாண்வர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 100 மரக்கன்றுகள் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டது.